டிக்டாக் செயலிக்கு ஐகோர்ட் தடையை எதிர்த்த வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் 15-ம் தேதி விசாரணை

‘டிக்டாக்’ செயலிக்கு சென்னை ஐகோர்ட் விதித்த தடையை நீக்ககோரிய வழக்கு 15-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. #SCplea #MadrasHC #banTikTok #banTikTokapp
டிக்டாக் செயலிக்கு ஐகோர்ட் தடையை எதிர்த்த வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் 15-ம் தேதி விசாரணை
Published on

‘டிக்டாக்’ செயலியில் நமது கலாசாரத்தை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் வீடியோக்கள் வருவதால் அதனை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ‘டிக்டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு கடந்த 3-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அவசர வழக்காக விசாரிக்க மறுத்து, இந்த வழக்கு உரிய நேரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை வரும் 15-ம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. #SCplea #MadrasHC #banTikTok  #banTikTokapp

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com