

புதுடெல்லி:
எஸ்.சி மற்றும் எஸ்.டி வன்கொடுமை சட்ட மறுசீராய்வு மனு மீதான விசாரணையை 10 நாட்கள் ஒத்தி வைத்த சுப்ரீம் கோர்ட், இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்து விட்டது.
எஸ்.சி மற்றும் எஸ்.டி வன்கொடுமை சட்டத்தை தளர்த்த வகை செய்யும் சில தீர்ப்புகளை சுப்ரீம் கோர்ட் வழங்கியிருந்தது. இதற்கு எதிராக நாடு முழுவதும் நேற்று தலித் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தனர். பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறிய சூழலில் 10 பேர் இதற்கு பலியாகினர்.
இந்நிலையில், எஸ்.சி., எஸ்.டி. சட்டதிருத்தம் விவகாரத்தில் ராகுல் காந்தி பொய்கள் மூலம் மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்துவதாக அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் ஒரு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய வீடியோயை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் மூலம் ராகுல் காந்தி எவ்வாறு சமூகத்தில் வெறுப்புணர்வை தூண்டுகிறார் என்பதைப் பாருங்கள், என கூறியுள்ளார். #RahulGandhi #AmitShah #tamilnews