பிரயக்ராஜ் பெயர் மாற்ற விவகாரம் - உ.பி. அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

அலகாபாத் பெயரை பிரயக்ராஜ் என பெயர் மாற்றம் செய்தது தொடர்பாக பதிலளிக்க வேண்டும் என உத்தர பிரதேசம் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on

புதுடெல்லி:

உத்தர பிரதேசம் மாநிலத்தின் அலகாபாத் மாவட்டம் பிரயக்ராஜ் என பெயர் மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது.

இதற்கிடையே, அலகாபாத் பெயர் மாற்றப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, அலகாபாத் நகரம் பிரயக்ராஜ் என பெயர் மாற்றம் தொடர்பாக பதிலளிக்கும்படி உத்தர பிரதேசம் மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com