தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கிய வழக்கில் அடுத்த வாரம் விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்தது எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த வாரம் மனு மீதான விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கிய வழக்கில் அடுத்த வாரம் விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். உள்ளாட்சி தேர்தலிலும் போட்டியிட வசதியாக தங்களுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிடக் கோரி தினகரன் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவிட்டது.

இந்தநிலையில் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யும் உத்தரவுக்கு எதிராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த அப்பீல் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. சுப்ரீம் கோர்ட்டு அப்பீல் மனு மீதான விசாரணையை தள்ளி வைத்தது. மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும்.

X

Maalai Malar
www.maalaimalar.com