10 வயது சிறுமி வயிற்றில் வளரும் 32 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் தடை

வளர்ப்பு தந்தையால் கற்பழிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 32 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் இன்று தடை விதித்துள்ளது.
10 வயது சிறுமி வயிற்றில் வளரும் 32 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் தடை
Published on

புதுடெல்லி:

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பம் பிழைப்புக்காக அரியானா மாநிலத்தில் உள்ள ரோத்தக் மாநிலத்தில் குடியேறியது. அந்த குடும்பத் தலைவியை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்துகொண்ட ஒருவர் அந்தப் பெண்ணின் பத்து வயது மகளை பலவந்தப்படுத்தி கற்பழித்தார். பின்னர், இதையை வாடிக்கையாக்கி கொண்டதால் அந்த சிறுமி கருவுற்றார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய சிறுமியின் வளர்ப்பு தந்தை கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வயிற்றில் வளரும் 26 வார கருவை கலைக்க சண்டிகர் நீதிமன்றத்தில் அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு கடந்த 14-ம் தேதி தள்ளுபடியானது.

இதுபோன்ற விவகாரங்களில் மருத்துவ ஆலோசனை வழங்கவும், இளம் வயதில் எதிர்பாராத விதமாக பாலியல் பலாத்காரத்துக்குள்ளாகி இதுபோல் கருவுறும் சிறுமிகளுக்கு கருக்கலைப்பு செய்வது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை ஏற்படுத்தக் கோரியும் அலக் அலோக் ஸ்ரீபஸ்தவா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இவ்வாறு பாதிப்புக்குள்ளாகும் சிறுமியர்களுக்கு சிறப்பான வகையில் பிரசவம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கேஹர் மற்றும் நீதிபதி சந்திர சூட் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தது.

இதுதொடர்பாக, சிறுமியின் உடல் நிலை பிரசவத்துக்கு ஈடு கொடுக்குமா? அவரது வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா? என்பதை பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சண்டிகர் நகர தலைமை அரசு மருத்துவமனையின் மகப்பேறியல் மருத்துவர்கள் குழுவை சுப்ரீம் கோர்ட் கேட்டு கொண்டது.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவர் குழு தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் தற்போது 34 வாரங்களாக பூரண வளர்ச்சி அடைந்துள்ள கருவை கலைப்பது குழந்தையை சுமக்கும் தாய்க்கும் வயிற்றில் வளரும் கருவுக்கும் நன்மை அல்ல என தீர்மானித்த நீதிபதிகள் இந்த கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்க முடியாது என்று உத்தரவிட்டனர்.

மேலும், சுப்ரீம் கோர்ட்டில் இதுபோன்ற வழக்குகள் அதிகம் வருவதால் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளில் உரிய மருத்துவ ஆலோசனை வழங்கவும், இறுதி முடிவு எடுக்கவும் நிரந்தரமான மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என இவ்வழக்கில் ஆஜரான மத்திய அரசு தலைமை வழக்கறிஞரை நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com