ஜனார்த்தன ரெட்டி பெல்லாரியில் பிரசாரம் செய்ய கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட் அதிரடி

கர்நாடக சட்டசபை தேர்தலில் பெல்லாரி தொகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி கேட்ட ஜனார்த்தன ரெட்டி கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #KarnatakaElection #JanardhanReddy #SupremeCourt
ஜனார்த்தன ரெட்டி பெல்லாரியில் பிரசாரம் செய்ய கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட் அதிரடி
Published on

புதுடெல்லி:

கர்நாடக மாநிலத்தில் மே 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளறது. இதையடுத்து, ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்க்கட்சியான பாஜகவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

பா.ஜ.க வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடியும், காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதற்கிடையே, பெல்லாரி தொகுதியில் ஜனார்த்தன ரெட்டியின் இளைய சகோதரர் சோமசேகர ரெட்டிக்கு பாரதிய ஜனதா கட்சி சீட் வழங்கியுள்ளது. சுரங்க முறைகேட்டு வழக்கில் ஜாமீனில் உள்ள ஜனார்த்தன ரெட்டி, பெல்லாரி தொகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார்.

இந்நிலையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் பெல்லாரி தொகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி கேட்ட ஜனார்த்தன ரெட்டி கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது

ஜனார்த்தன ரெட்டி தாக்கல் செய்த மனு இன்று நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜனார்த்தன ரெட்டியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. #KarnatakaElection #JanardhanReddy #SupremeCourt 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com