நீதிபதி கர்ணன் சிறை தண்டனையை ரத்து செய்ய முடியாது: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நீதிபதி கர்ணனின் சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி தொடர்ந்து 4-வது முறையாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது.
நீதிபதி கர்ணன் சிறை தண்டனையை ரத்து செய்ய முடியாது: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை ஐகோர்ட்டில் 8 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்றிய நீதிபதி எஸ். கர்ணன் தலைமை நீதிபதியின் ஒரு உத்தரவை ரத்து செய்ததால் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு சென்ற நிலையிலும் நீதிபதிகள் மீது தொடர்ந்து புகார் கூறினார். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையும் ஏற்க மறுத்து விட்டார்.

இதையடுத்து நீதிபதி கர்ணன் மீது சுப்ரீம் கோர்ட்டு தாமாகவே முன் வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. தலைமை நீதிபதி ஜெ.எஸ். கேகர் தலைமையிலான 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நீதிபதி கர்ணனுக்கு கடந்த மே 9-ந் தேதி 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

இதையடுத்து நீதிபதி கர்ணன் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி கொல்கத்தா போலீசார் சென்னை வந்து முகாமிட்டனர். இருப்பிடம் தெரியாததால் போலீசார் கொல்கத்தா திரும்பி விட்டனர்.


இதற்கிடையே சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி நீதிபதி கர்ணன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன் பிறகு நீதிபதி கர்ணனின் வக்கீல் 2 முறை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளிடம் கர்ணணை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கேட்டுக் கொண்டார். அதையும் ஏற்க மறுத்துவிட்டனர்.

தொடர்ந்து 4-வது முறையாக விடுத்த கோரிக்கையும் கோர்ட்டு ஏற்கவில்லை. கர்ணனுக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு தான் சிறை தண்டனை விதித்தது எனவே அந்த அமர்வு முன்பு தான் முறையிட வேண்டும். 2 பேர் அமர்வு அதை விசாரிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com