சென்னை- சேலம் 8 வழிச்சாலை வழக்கு - அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்

சென்னை- சேலம் 8 வழிச்சாலை தொடர்பான வழக்கை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்துள்ளது சுப்ரீம் கோர்ட்.
சுப்ரீம் கோர்ட்
சுப்ரீம் கோர்ட்
Published on

புதுடெல்லி:

விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து, சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்திருந்தது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் முன்அனுமதி தேவையில்லை என பிரமாண பத்திரத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் துஷார் மேத்தா வேறொரு வழக்கில் வாதிட்டு வருவதால், இந்த வழக்கை அடுத்த வாரத்துக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com