மே 23-ந் தேதிக்கு பிறகு ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரிய வரும் - சத்திய நாராயணா

மே 23-ந் தேதிக்கு பிறகு ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரிய வரும் - சத்திய நாராயணா

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு மே 23-ந் தேதிக்கு பிறகு தெளிவாக தெரிய வரும் என்று ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா கூறினார். #SathyanarayanaRao #Rajinikanth
Published on

திருப்பூரில் ரஜினி மன்ற நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயணா திருப்பூர் வந்தார்.

முன்னதாக அவர் திருப்பூர் சின்னான்டி பாளையத்தில் உள்ள புகழ் பெற்ற சித்திர குப்தர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

மே மாதம் 23-ந் தேதிக்கு பிறகு ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரிய வரும்.

மோடியின் நல்ல திட்டங்களை ரஜினிகாந்த் ஆதரித்தாரே தவிர அவருக்கு வாக்களிக்க கூறவில்லை. ரஜினிகாந்த் - கமல் நட்பு எப்போதும் நிலைக்கும்.

கமல்ஹாசன் அரசியலுக்கு முன் கூட்டியே வந்து விட்டார். ரஜினிகாந்த் விரைவில் வருவார்.

இவ்வாறு அவர் கூறினார். #SathyanarayanaRao #Rajinikanth

X

Maalai Malar
www.maalaimalar.com