வேட்புமனுவில் கைரேகை பெறும் போது ஜெ. சுயநினைவுடன் இருந்தார் - விசாரணை ஆணையம்

வேட்புமனுவில் கைரேகை பெறும் போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.#JayaDeath
வேட்புமனுவில் கைரேகை பெறும் போது ஜெ. சுயநினைவுடன் இருந்தார் - விசாரணை ஆணையம்
Published on

சென்னை:

தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வேட்புமனுவில் கைரேகை பெறும் போது ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்ததாக அரசு மருத்துவர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் குறுக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்திருந்தார்.

அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான தகவல்கள் 10-க்கும் மேற்பட்ட முறை ஓ.பன்னீர் செல்வத்திற்கு தெரிவிக்கப்பட்டதாகவும் பாலாஜி தெரிவித்ததாக செந்தூர்பாண்டியன் கூறினார். சுகாதாரத்துறை மந்திரி விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடமும் சிகிச்சை தகவல்களை பாலாஜி கூறியதாக அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை விசாரிக்க மனு தாக்கல் செய்வோம் எனவும் செந்தூர் பாண்டியன் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜெயலலிதா கைரேகை வைக்கும் போது சுயநினைவுடன் இருந்ததாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. கைரேகை பெறும்போது சசிகலா, மருத்துவர் பாலாஜி மற்றும் அப்பல்லோ மருத்துவர் பாபு ஆபிரஹாம் இருந்துள்ளனர். சசிகலா கேட்டுக்கொண்டதன் பேரில் பூங்குன்றன் ஜெயலலிதாவிடம் கைரேகை கேட்டுள்ளதாக விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.  #JayaDeath #TamilNews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com