போக்குவரத்து ஊழியர்கள் பலி: சரத்குமார் இரங்கல்

பொறையார் போக்குவரத்து கழக பணிமனை விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்கள் பலி: சரத்குமார் இரங்கல்
Published on

சென்னை:

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பொறையார் என்ற இடத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக் கட்டடம் இடிந்து விழுந்து 8 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

மழைக்காலம் தொடரவிருக்கும் நிலையில், முன்கூட்டியே பழைமையான கட்டடங்களை இடித்து புதிதாகக் கட்டவும், பிற கட்டடங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு பழுது நீக்கிடவும் தக்க நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

கட்டிடம் இடிந்ததில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனையும் பிரார்த்திக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com