சங்கராபுரம் அருகே விலங்குகளை வேட்டையாட முயன்ற வாலிபர் துப்பாக்கியுடன் கைது

சங்கராபுரம் அருகே விலங்குகளை வேட்டையாட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

ரிஷிவந்தியம்:

சங்கராபுரம் அருகே வாணாபுரம் பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எகால் ஏரிக்கு அருகே நாட்டு துப்பாக்கியுடன் சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் எகால் காட்டு கொட்டாயை சேர்ந்த மைக்கேல்ராஜ் (29) என்பதும் விலங்குகளை வேட்டையாடுவதற்காக துப்பாக்கியுடன் சென்றதும் தெரியவந்தது. உடனே மைக்கேல்ராஜை கைது செய்து அவரிடமிருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com