இந்தியா - பாகிஸ்தான் இடையே சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நாளை மீண்டும் தொடக்கம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நாளை மீண்டும் தொடங்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. #SamjhautaExpress
இந்தியா - பாகிஸ்தான் இடையே சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நாளை மீண்டும் தொடக்கம்
Published on

புதுடெல்லி:

ராணுவ வீரர்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் பதட்டம் நிலவியது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதட்டம் நிலவியதால் இந்த ரெயில் நிறுத்தப்படுவதாக சமீபத்தில் இந்திய ரெயில்வே அறிவித்தது.

இதற்கிடையே, பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நேற்றிரவு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை முதல் மீண்டும் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. #SamjhautaExpress

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com