சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது

சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது. மேலும் கொரோனாவுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 295 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 339 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதாவது, சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 213 பேர், ஓமலூரில் 12 பேர், வீரபாண்டி, சேலம் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தலா 10 பேர், காடையாம்பட்டியில் 9 பேர், சங்ககிரி, பனமரத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி ஆகிய பகுதிகளில் தலா 7 பேர், எடப்பாடி, மேச்சேரி, அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் தலா 5 பேர், ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், கொளத்தூர், தலைவாசல், மேட்டூர் ஆகிய பகுதிகளில் தலா 3 பேர், தாரமங்கலத்தில் 2 பேர், கொங்கணாபுரம், அரியபாளையம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல்லில் இருந்து சேலம் வந்த 6 பேருக்கும், காஞ்சீபுரம், ஈரோடு, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 41 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 250 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இறந்தார்.

மேலும் சேலத்தை சேர்ந்த 49 வயதுடைய ஆண் ஒருவரும், 83 வயதுடைய மூதாட்டியும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி பலியானார்கள். இதேபோல் சேலத்தை சேர்ந்த 65 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இறந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com