உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்ஸ்- இந்திய வீரர் சாய் பிரனீத் வெண்கலம் வென்றார்

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் வெண்கலம் வென்றார்.
சாய் பிரனீத்
சாய் பிரனீத்
Published on

25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்ஸ் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரை இறுதி போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத், ஜப்பான் வீரர் கெண்டோவை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் சாய் பிரனீத் 21-13, 21-8 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றார். இதையடுத்து உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாய் பிரனீத் வெண்கலம் வென்றுள்ளார்.

உலக பேட்மிண்டனில் ஆண்கள் பிரிவில் இந்தியர் ஒருவர் பதக்கம் வெல்வது 36 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com