திருப்பதியில் தெண்டுல்கர் சாமி தரிசனம்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
திருப்பதியில் தெண்டுல்கர் சாமி தரிசனம்
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, கிரிக்கெட் வீரர் தெண்டுல்கர் நேற்று வந்தார்.

ஏழுமலையானை தரிசிக்க தெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகன் மற்றும் ஐதராபாத் கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் சாமுண்டேஸ்வர நாத், நிம்மலகட்ட பிரசாத் ஆகியோர் விமானம் மூலம் திருப்பதிக்கு வந்தனர்.

அங்கு அவர்களை கிரிக்கெட் சங்கத்தை சேர்ந்தவர்கள் மலர் செண்டு அளித்து வரவேற்றனர்.

பின்னர், தனி கார் மூலம் திருமலைக்கு வந்த தெண்டுல்கரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். தெண்டுல்கர் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com