குஜராத்: மாரத்தானில் பங்கேற்று ஓடியவர் மாரடைப்பால் மரணம்

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடியவர் மாரடைப்பால் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
குஜராத்: மாரத்தானில் பங்கேற்று ஓடியவர் மாரடைப்பால் மரணம்
Published on

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் வதோதரா நகரில் ஆண்டுதோறும் வதோதரா சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியை குஜராத் முதல் மந்திரி விஜய் ருபானி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மொத்தம் 91 ஆயிரத்து 908 பேர் பங்கேற்றனர்.

இந்த மாரத்தான் போட்டியில் ராஜ்கோட் நகரை சேர்ந்த பரத் சமானி (62), என்பவர் கலந்து கொண்டார். இதில் பங்கேற்று ஓடிய நிலையில் சமானி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து 3 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் அவரை பரிசோதித்து ஆம்புலன்சில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் சமானி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பரத் சமானி ஏற்கனவே அகமதாபாத் மற்றும் ராஜ்கோட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com