ரூ.95 லட்சம் மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்ய ஐகோர்ட்டு தடை

ரூ.95 லட்சம் மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்தது.
ரூ.95 லட்சம் மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்ய ஐகோர்ட்டு தடை
Published on

ரூ.95 லட்சம் மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்தது.

தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான செந்தில் பாலாஜி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 16 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 95 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி உள்பட 3 பேர் மீது சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் செந்தில் பாலாஜி உள்பட 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை அரசு வக்கீல் இந்த வழக்கில் ஆஜராகி வாதாட இருப்பதால் மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று அரசு வக்கீல் கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com