செய்திகள்
2-வது டி20யில் டக்அவுட் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்த ரோகித் சர்மா
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2-வது டி20-யில் டக்அவுட் மூலம் வெளியேறிய ரோகித் சர்மா மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார். #SAvIND #Hitman
முதல் ஓவரை சந்தித்த தவான் ரன்ஏதும் எடுக்காம் மெய்டன் ஆக்கினார். 2-வது ஓவரை ரோகித் சர்மா சந்தித்தார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே ரோகித் சர்மா டாலா பந்தில் எல்பிடபிள்யூ ஆகி டக்அவுட் ஆனார்.
இதன் மூலம் டி20 போட்டிகளில் நான்கு முறை டக்அவுட் ஆகி, அதிக முறை டக்அவுட் ஆகிய முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா, யூசுப் பதான் ஆகியோர் மூன்று முறை டக்அவுட் ஆகியிருந்தார்கள். இவர்களின் மோசமான சாதனையை முறியடித்து ரோகித் சர்மா முதல் இடத்தில் இருக்கிறார்.

