பரோல் கேட்டு ராபர்ட் பயாஸ் வழக்கு- தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம்

ராபர்ட் பயாஸ் பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு ஐகோர்ட் கூடுதல் அவகாசம் வழங்கி உள்ளது.
ராபர்ட் பயாஸ்
ராபர்ட் பயாஸ்
Published on

சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வருகிறார் ராபர்ட் பயாஸ். இவர் தன் மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை செய்ய பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் நெதர்லாந்தில் வசிக்கும் தன் மகனுக்கு திருமண ஏற்பாடு செய்ய 30 நாட்கள் பரோல் வழங்க கோரி சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கு அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தனக்கு பரோல் வழங்க சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும்படி சிறைத்துறை டி.ஐ.ஜி., புழல் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, சிறைத்துறை தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய இருப்பதால் வழக்கை ஒத்திவைக்கும்படி அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கினர். நவம்பர் 4-ம் தேதிக்குள் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com