நகர்ப்புறங்களில் வெப்பத்தை குறைக்க சிகரெட் கழிவில் ரோடு

சிகரெட் புகைத்த பிறகு தூக்கி எறியப்படும் பஞ்சுடன் கூடிய கழிவு துண்டுகளை ரோடு போட பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.
நகர்ப்புறங்களில் வெப்பத்தை குறைக்க சிகரெட் கழிவில் ரோடு
Published on

சிகரெட் புகைத்த பிறகு பஞ்சுடன் கூடிய கழிவு துண்டுகளை கீழே வீசி விடுகின்றனர். அவை கண்ட இடங்களில் குப்பைகளாக குவிந்து கிடக்கின்றன. அவ்வாறு தூக்கி எறியப்படும் கழிவு குப்பையை ரோடு போட பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

ரோடு போடுவதற்கு கடுமையான கலவைப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. அது ஒட்டிக் கொள்ளும் தன்மையுடையது. எளிதில் தீப்பிடிக்க கூடியது.

அதனுடன், ‘பாராபின் வேக்ஸ்’ எனப்படும் மெழுகு போன்ற ஒரு பொருள் மற்றும் ரசாயன பொருளுடன் சிகரெட் கழிவு துண்டுகளும் சேர்த்து கலவை தயாரிக்கப்படுகிறது. இந்த சிகரெட் கழிவு துண்டு ரோடு போட தயாரிக்கும் கலவையை கசிவதில் இருந்து தடுத்து காக்கிறது.


இதனால் போடப்படும் ரோடு பலம் வாய்ந்ததாக இருக்கும். பொதுவாக நகர்ப்புறங்களில் ரோடுகளில் இருந்து ‘தகதக’வென கடுமையான வெப்பம் வெளியாகும். ஆனால் சிகரெட் கழிவு துண்டு பயன்படுத்துவதன் மூலம் அத்தகைய வெப்பம் வெளியேறாமல் தடுக்கப்படும்.

X

Maalai Malar
www.maalaimalar.com