பழனியில் தமிழக அரசை கண்டித்து சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சாலை பராமரிப்பு பணியினை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து பழனியில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைபணியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழனியில் தமிழக அரசை கண்டித்து சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

பழனி:

திண்டுக்கல் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார். கோட்டச் செயலாளர் மணிமாறன் வரவேற்றார்.

கோட்டத்தலைவர் ராஜமாணிக்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநிலத்தலைவர் அம்சராஜ் சிறப்புரை ஆற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் பராமரிப்பு பணிகளை கிருஷ்ணகிரி திருவள்ளூர், பொள்ளாச்சி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய கோட்டங்களை தனியாரிடம் பராமரிப்புப் பணிக்கு வழங்கியுள்ளதை கண்டித்தும் இந்த ஆண்டு பழனி கோட்டத்தையும் தனியாருக்கு வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதையும் கண்டித்தும் கோஷம் எழுப்பினர். தனியாருக்கு விடும் அறிவிப்புக்களை திரும்பபெற வேண்டும் அரசே ஏற்று நடத்த வேண்டும் என சாலை பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டப் பொறியாளர் கந்தசாமி நன்றி கூறினார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com