திருச்சி:
திருச்சி அண்ணா உள்விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கி 4 -ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு கைபந்து, கால்பந்து மற்றும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்கிறார்கள். இந்த விளையாட்டு போட்டிக்கு கலெக்டர் ராசாமணி தலைமை தாங்கினார். விளையாட்டு போட்டியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தொடங்கி வைத்து மாணவ- மாணவிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். நேற்று மனு தாக்கலின் போது டி.டி.வி தினகரன் வெளியூர் ஆட்களை அழைத்து வந்து எங்களுக்கு எதிராக கோஷம் போட்டார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் அவ்வாறு கோஷம் போட மாட்டார்கள். நாங்கள் ஆர்.கே.நகர் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம். ஒக்கி புயலால் சேதம் அடைந்த கன்னியாகுமரி சுற்றுலா தளத்தை மேம்படுத்த தமிழக சுற்றுலா துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மன்றம் சுரேஷ்குப்தா, பகுதி செயலாளர்கள் அன்பழகன், முஸ்தபா, பாலசுப்பிரமணியன்,நாகநாதர் பாண்டி, ஒன்றிய செயலாளர் முத்துகருப்பன், வக்கீல்கள் ராஜ்குமார், வெங்கடேசன், கூடுதல் அரசு வக்கீல் ஜெயராமன், ஜெயஸ்ரீ, மகாலட்சுமி மலையப்பன், அக்தர்பெருமாள், சாந்தி, கலாசெல்வம், மாவட்ட பிரதிநிதி, காசிபாளையம் சுரேஷ், வண்ணாரப்பேட்டை ராஜன், வீரமுத்து, குட்ட ப்பட்டு செல்வம், வட்ட செயலாளர்கள் செல்லப்பன், ஜெயக்குமார், மகாலட்சுமி, காஜாபேட்டை சரவணன், சாத்தனூர் ரமேஷ், கே.கே.நகர். சரவணன், விளையாட்டு அலுவலர் சத்தியமூர்த்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.