

ராயபுரம்:
ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறார். வடசென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர் மாதவரம் சுதர்சனம் தலைமையில் வேட்பாளர் மருதுகணேஷ் கொருக்குபேட்டை மேயர் பாசுதெரு, ஆரணி கங்கன் தெரு, வீராகுட்டி தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அந்த பகுதி பெண்கள் வேட்பாளர் மருதுகணேசுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். செயல்படாத அ.தி.மு.க.அரசுக்கு பாடம் புகட்ட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். தொகுதி மக்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவேன் என்று கூறி மருதுணேஷ் ஆதரவு திரட்டினார்.