பலத்த மழையால் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்: காயமின்றி உயிர் தப்பிய மத்திய மந்திரி

அருணாசலப் பிரதேசத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணம் செய்த மந்திரி உள்பட அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
பலத்த மழையால் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்: காயமின்றி உயிர் தப்பிய மத்திய மந்திரி
Published on

மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜூ, அருணாசலபிரதேசத்தில் உள்ள சிரோ பகுதியில் நடக்கும் அறுவடை திருவிழாவில் பங்கேற்க இன்று காலை கவுகாத்தியில் இருந்து எல்லை பாதுகாப்பு படை ஹெலிகாப்டரில் சென்றார். அவருடன் ஏழு பேர் பயணம் செய்தனர்.

அருணாசலப் பிரதேசத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. அடர்ந்த பனிமூட்டமும் நிலவியது.

இந்நிலையில், கிரண் ரிஜிஜூ இடாநகரை அடைவதற்கு முன்பாகவே, வானிலை மோசமடைந்தது. இதனால் ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட விமானி, அருகிலுள்ள வயல்வெளியில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினார்.

இதில் பயணம் செய்த மத்திய உள்துறை இணை மந்திரி கிரண் ரிஜிஜூ உள்பட அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com