

திருவனந்தபுரம்:
கேரளாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இது பற்றி சுகாதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா கூறும்போது, கேரளாவில் நேற்று ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை.
அதே நேரம் நேற்று 9 பேர் நோயில் இருந்து குணமாகி உள்ளனர். கண்ணூரில் 4 பேரும், காசர்கோட்டில் 4 பேரும், எர்ணாகுளத்தில் ஒருவரும் நோயில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர்.
மாநிலம் முழுதும் 392 பேர் குணமாகி உள்ளனர். இனி வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். அதற்கான ஏற்பாடுகளை சுகாதார துறையினர் எடுத்து வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 21 ஆயிரத்து 499 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 21 ஆயிரத்து 67 பேர் வீடுகளிலும், 432 பேர் ஆஸ்பத்திரியிலும் உள்ளனர்.
திருவனந்தபுரம், பாறசாலை, வெள்ளறடை உள்பட 10 இடங்கள் ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.