7.5 சதவீத இடஒதுக்கீடு: கவர்னர் அனுமதி அளிக்க வேண்டும்- ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

கவர்னர் உடனடியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஜி ராமகிருஷ்ணன்
ஜி ராமகிருஷ்ணன்
Published on

சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதா சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டது. ஒரு மாத காலம் கடந்த பிறகும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வருகிறார். கவர்னர் உடனடியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com