திருப்பத்தூர் நண்பர்கள் சேமிப்பில் இருந்து நிவாரண பொருட்கள்

திருப்பத்தூர் நண்பர்கள் சேமிப்பில் இருந்து 500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய நண்பர்கள்.
500 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய நண்பர்கள்.
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் ஏரிகோடி பகுதிகளில் வசிப்பவர்கள் சதயராஜ், பாலமுருகன், திருப்பதி, வெங்கடேசன், இளவரசன் மற்றும் நண்பர்கள் இணைந்து ஒன்று சேர்ந்து பசுமை தாய்நாடு என்ற அமைப்பை ஏற்படுத்தி தங்களது சேமிப்பில் இருந்து 2.5 லட்சம் ரூபாய்க்கு அரிசி மற்றும் 10 வகையான காய்கறிகளை வாங்கி சுமார் 500 குடும்பங்களுக்கு தலா 3 கிலோ அரிசியும், 10 வகைகள் கொண்ட காய்கறி பை திருமால் நகர், ஏரிக்கோடி, குள்ளச்சாரி வட்டம், களருர், ராச்சமங்கலம் பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு கலெக்டர் சிவன் அருள், போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கினர்.

பின்னர் நண்பர்கள் ஒன்று சேர்ந்து 500 குடும்பங்களுக்கு காய்கறிகள் மற்றும் அரிசி பைத் தொகுப்பை வீடு வீடாக நேரில் சென்று சென்று கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com