ஈராக்கில் போரால் சிதிலமடைந்த நகரங்களை மறுகட்டமைக்க 88 பில்லியன் டாலர் தேவை

ஈராக்கில் போரால் சிதிலமடைந்த நகரங்களை மறுகட்டமைக்க 88 பில்லியன் டாலர் தேவை

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்திற்கு எதிரான போரால் சேதமான நகரங்களை மறுகட்டமைக்க 88 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது. #Iraq
Published on

குவைத்:

சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு 2014-ம் ஆண்டில் ஈராக்கின் மொசூல் உள்ளிட்ட பல நகரங்களை தங்களது கட்டுபாட்டில் கொண்டு வந்தனது. அங்குள்ள பழமை வாய்ந்த மசூதிகளை நாசமாக்கிய ஐ.எஸ் இயக்கத்தினர் பெரும்பாலான மக்களையும் கொன்று குவித்தனர்.

அவர்களுக்கு எதிராக சர்வதேச உதவியுடன் களமிறங்கிய ஈரான் அரசுப்படையினர் கடந்த ஆண்டு ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒழித்து விட்டதாக அறிவித்தனர். இதனைய அடுத்து, போரில் சிதிலமடைந்த நகரங்களை மறுகட்டமைக்கும் பணியை தற்போது மேற்கொள்ள உள்ளனர். இதற்காக, குவைத்தில் ஒரு கருத்தரங்கு நடந்தது.

அதில், ஈராக்கில் மறுகட்டமைப்புக்கு மட்டும் 88.4 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது. வீடுகளை இழந்தோருக்கு வீடுகள் கட்டுவதே முதன்மை இலக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் மறுகட்டமைப்புக்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால், அமெரிக்க நிதி அளிக்குமா? என்பதை அவர் தெளிவுபடுத்துவது இல்லை. அமெரிக்காவே முதன்மை என களமிறங்கிய டிரம்ப், வளைகுடா நாடுகளுக்கு நிதியுதவி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. பாகிஸ்தான், பாலஸ்தீனம் ஆகியவற்றுக்கு நிதி அளிப்பதை தேவையற்றதாக நினைப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Iraq #TamilNews

X

Maalai Malar
www.maalaimalar.com