கே.எம் ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க மத்திய அரசு முட்டுக்கட்டை - காரணம் என்ன?

வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகியோரை கொலிஜியம் பரிந்துரைத்த நிலையில், இந்து மல்ஹோத்ராவை மட்டும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க மத்திர அரசு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளது. #KMJoseph
கே.எம் ஜோசப்பை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க மத்திய அரசு முட்டுக்கட்டை - காரணம் என்ன?
Published on

சுப்ரீம் கோர்ட் மற்றும் ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீதிபதி நியமனம் தொடர்பான பரிந்துரைகளை அளித்தது. சுப்ரீம் கோர்ட்டில் வாதாடும் மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.

இந்த பரிந்துரையின் மீது விரைவில் முடிவெடுக்காமல் இருந்த மத்திய அரசு, இந்து மல்ஹோத்ராவை மட்டும் நீதிபதியாக்க ஒப்புதல் அளித்துள்ளது. கே.எம் ஜோசப் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு கொலிஜியத்தை கேட்டுக்கொண்டுள்ளது.

2014-ம் ஆண்டு முதல் உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் கே.எம் ஜோசப் கேரளாவை சேர்ந்தவர். தற்போதைய நிலவரப்படி கே.எம் ஜோசப் மூத்த ஐகோர்ட் நீதிபதியாக உள்ளார். இதனால், மூப்பு அடிப்படையில் அவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரைத்தது.

கடந்த 2016-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவிய சூழலில் மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மத்திய அரசின் இந்த உத்தரவை கே.எம் ஜோசப் ரத்து செய்திருந்தார். இதனை வைத்தே அவர் பழிவாங்கப்படுவதாக பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com