இன்று 70-வது பிறந்தநாள்: லல்லுவுக்கு நிதிஷ்குமார் வாழ்த்து

பீகார் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்டரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் இன்று தனது 70-வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார். அவருக்கு அம்மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
இன்று 70-வது பிறந்தநாள்: லல்லுவுக்கு நிதிஷ்குமார் வாழ்த்து
Published on

பீகார் மாநில முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவ் தனது 70-வது பிறந்தநாளை 70 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கொண்டாடினார்.

இதையடுத்து, இன்று காலை லல்லுவை வாழ்த்த ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் அவரது இல்லத்தில் குவிந்திருந்த வேளையில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

மிக சாதாரணமான குடும்பத்தில் பிறந்து கடுமையான போராட்டத்துக்கு இடையில் அரசியலில் இவ்வளவு பெரியநிலையை எட்டியுள்ள லல்லுவின் வாழ்க்கை ஆச்சரியப்பட வைப்பதாக தெரிவித்த நிதிஷ்குமார், அரசியலில் அவர் இன்னும் உயர்வான நிலையை அடைய வேண்டும் என இறைவனை வேண்டுவதாக குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com