புதுச்சேரி வர உள்ள பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் ரங்கசாமி சந்திக்கிறார்

என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான ரங்கசாமி அனுமதி கேட்டதை அடுத்து புதுவை வரும் பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தில் சந்தித்து பேச அனுமதி அளித்துள்ளார்.
புதுச்சேரி வர உள்ள பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் ரங்கசாமி சந்திக்கிறார்
Published on

புதுச்சேரி:

பிரதமர் நரேந்திர மோடி ஆரோவில் பொன்விழாவில் கலந்து கொள்வதற்காக வருகிற 25-ந் தேதி புதுவை வருகிறார்.

அவரை சந்திப்பதற்காக என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான ரங்கசாமி அனுமதி கேட்டு இருந்தார்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணியில் நீடிக்க அந்த கட்சி விரும்புகிறது.

இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தும் வகையில் ரங்கசாமி பிரதமரை சந்திக்க விரும்பினார். எனவே அனுமதி கேட்டதை அடுத்து அவரை விமானநிலையத்தில் சந்தித்து பேச பிரதமர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதற்காக பிரதமர் அலுவலகத்தில் இருந்து ரங்கசாமிக்கு கடிதம் வந்துள்ளது.

இது சம்பந்தமாக ரங்கசாமியிடம் கேட்ட போது இதுபற்றி பின்னர் விரிவாக தகவல் தெரிவிக்கிறேன் என்று கூறினார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com