ராமாபுரத்தில் கஞ்சா விற்ற ரவுடியின் தம்பி கைது

ராமாபுரத்தில் கஞ்சா விற்ற ரவுடியின் தம்பியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

போரூர், நவ.19-

ராமாபுரம் ஆண்டவர் நகர் மெயின் ரோட்டில் வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சந்தேகப்படும் விதத்தில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து அவரது பையை சோதனை செய்தனர்.

அதில் கஞ்சா பொட்டலங் கள் இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. ராமாபுரம் வினோத்குமார் (35) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து 1கிலோ 225கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர் ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து கஞ்சா வாங்கி வந்து வடமாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் கைது செய்யப் பட்ட வினோத்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு ராமாபுரம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிரபல ரவுடி சுரேஷின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேளச்சேரி, தரமணி 100 அடி சாலையில் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்ற கோபியை போலீ சார் கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் படி குமரன் நகரில் உள்ள ரமேஷ் என்பவரது வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். இதில் 2½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப் பட்டது. ரமேஷையும் போலீ சார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com