கருப்பு பணம் விவகாரத்தில் மோடி நேர்மை தவறி விட்டார்: ராம்ஜெத்மலானி குற்றச்சாட்டு

கருப்பு பணம் விவகாரத்தில் பிரதமர் மோடி நேர்மை தவறி விட்டார் என்று பிரபல வக்கீலுமான ராம்ஜெத்மலானி குற்றம் சாட்டியுள்ளார்.
கருப்பு பணம் விவகாரத்தில் மோடி நேர்மை தவறி விட்டார்: ராம்ஜெத்மலானி குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி:

பாரதீய ஜனதாவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், பிரபல வக்கீலுமான ராம்ஜெத் மலானி சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.

2014 பாராளுமன்ற தேர்தலின் போது வெளி நாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்து வைத்துள்ள ரூ.90 லட்சம் கோடியை திரும்ப கொண்டு வருவேன். அந்த பணம் மூலம் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சத்தை செலுத்துவேன் என்று கூறினீர்கள்.

ஆனால், இதை எதையுமே செய்யவில்லை. கருப்பு பணம் மீட்புக்கு நான் எடுத்த நடவடிக்கைக்கும் நீங்கள் ஒத்துழைப்பு தர வில்லை. இதன் மூலம் நாட்டையே ஏமாற்றி விட் டீர்கள். காங்கிரஸ் செய்த அதே தவறை நீங்களும் செய்கிறீர்கள்.

2014 தேர்தலின் போது கருப்பு பணம் மீட்புக்காக உங்களை ஆதரித்தேன். நான் அப்போது செய்தது முட்டாள்தனமானது என்பதை நான் இப்போது உணருகிறேன். 2019 தேர்தலில் நீங்கள் அவமான கரமான தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இது சம்பந்தமாக மேலும் அவர் கூறி இருப்பதாவது:-

மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று 2012-ம் ஆண்டிலேயே நான் குரல் கொடுத்தேன். ஆனால், பாரதீய ஜனதாவில் மோடிக்கு எதிராக இருந்தவர்கள் இந்த விவகாரத்தில் என்னை கடுமையாக எதிர்த்தனர். என்னை கட்சியை விட்டு நீக்குவதற்கு உரிய வேலைகளை செய்தார்கள். எல்.கே. அத்வானி, நிதின்கட்காரி போன்றவர்கள் என்னை பல முறை சந்தித்து மோடியை ஆதரிப்பதை கைவிடுமாறு கூறினார்கள். அவ்வாறு செய்தால் கட்சியை விட்டு நீக்க மாட்டோம் என்றும் கூறினார்கள்.

ஆனாலும், நான் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந் தேன். கருப்பு பணத்தை வெளியே கொண்டு வர முயற்சி எடுப்பார் என்று நம்பினேன். ஆனால், அவர் உரிய நடவடிக்கைகள் எதையும் செய்யவில்லை. அவர் இந்த வி‌ஷயத்தில் நேர்மை தவறி நடந்து கொண்டார்.

2015-ம் ஆண்டு தொடக்கத்தில் கட்சி தலைவர் அமித்ஷா கருப்பு பணம் சம்பந்தமாக பேசும் போது, கருப்பு பணம் மீட்புக்கு எதிர் மறையான கருத்துகளை கூறினார்.

கருப்பு பணத்தை மீட்போம் என்று சொன்னதே தேர்தல் ஸ்டண்டுக்காக சொல்லப்பட்ட வார்த்தை. அது ஒரு நகைச்சுவை என்பது போல் அமித்ஷா வின் பேச்சு இருந்தது. அதாவது கருப்பு பணம் மீட்பு வி‌ஷயத்தில் உண்மையாக நடந்து கொள்ள வில்லை.

நான் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் என்னை கட்சியை விட்டு நீக்கி விட்டார்கள். இது சட்ட விரோதமானது. இது சம்பந்தமாக நான் வழக்கு தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராம்ஜெத்மலானிக்கு தற்போது 94 வயது ஆகிறது. அவர், கடந்த வாரம் தீவிர வக்கீல் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com