இந்தியா பலவீனமான நாடு அல்ல என்பதை சீனா உணர்ந்துள்ளது: ராஜ்நாத் சிங்

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்தியா பலவீனமான நாடு அல்ல என்பதை சீனா உணர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்,
இந்தியா பலவீனமான நாடு அல்ல என்பதை சீனா உணர்ந்துள்ளது: ராஜ்நாத் சிங்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ தொகுதியில் உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:

இந்திய எல்லைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. இந்தியா பலவீனமான நாடு அல்ல என்பதை சீனா இப்போது உணர்ந்துள்ளது.

உலகின் சக்திமிக்க நாடாக இந்தியாவை உருவாக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையில் அமைந்துள்ள மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாகிஸ்தான் தினமும் தீவிரவாதிகளை அனுப்பி தொந்தரவு கொடுத்து வருகிறது. அதன்மூலம் இந்தியாவை உடைக்க நினைக்கிறது. ஆனால் இந்திய ராணுவத்தினர் தினமும் 2 முதல் 4 தீவிரவாதிகளை கொன்று தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com