ராபர்ட் பயாசுக்கு 30 நாள் ‘பரோல்’ - ஐகோர்ட்டு உத்தரவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாசுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ராபர்ட் பயாஸ்
ராபர்ட் பயாஸ்
Published on

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயாஸ் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளார்.

இந்நிலையில் தனது மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை செய்ய தனக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 30 நாட்கள் ராபர்ட் பயாசுக்கு பரோல் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com