ரஜினிகாந்த் கோட்டையில் முதல்வராக அமரும் நாள் வரும்: திருச்சி மாநாட்டில் தமிழருவி மணியன் பேச்சு

ரஜினிகாந்த் தேர்தலில் வெற்றிபெற்று கோட்டையில் முதல்வராக அமரும் நாள் வரும் என்று காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழருவி மணியன் நம்பிக்கை தெரிவித்தார்.
ரஜினிகாந்த் கோட்டையில் முதல்வராக அமரும் நாள் வரும்: திருச்சி மாநாட்டில் தமிழருவி மணியன் பேச்சு
Published on

திருச்சி:

திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் காந்திய மக்கள் இயக்கம் சார்பில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அவசியமா? என்ற தலைப்பில் அரசியல் விழிப்புணர்வு மாநாடு மற்றும் ஆய்வுரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கணேசன் தலைமையில் பொதுக் கூட்டத்தில் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் பங்கேற்று பேசினார். இந்த மாநாட்டில் ரஜினி ரசிகர்கள் திரளாக பங்கேற்றனர்.

மாநாட்டில் தமிழருவி மணியன் பேசியதாவது:-

நிச்சயமாக அரசியலுக்கு வருவது என்று முடிவு எடுத்துவிட்டதாக ரஜினி கூறினார். அரசியலுக்கு வருவது ஆண்டவன் எனக்கு இட்ட கட்டளை என ரஜினிகாந்த் என்னிடம் கூறினார். தூய்மையான ஆட்சியை வழங்க நடிகர் ரஜினிகாந்த் புறப்பட்டுவிட்டார்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஊழலால் இரு திராவிட கட்சிகளும் சீரழித்துவிட்டன. தமிழகத்தை ஊழல்மயமாக்கிய திராவிட கட்சிகளை அகற்ற ரஜினிகாந்த் முதல்வராக வேண்டும். ரஜினிகாந்தை தமிழகம் தவறவிட்டால் வாழ்வதற்கும் வழியில்லாமல் போகும். 

வெளிப்படையான, ஊழல் இல்லாத ஆட்சி ரஜினியின் கனவு. காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே ரஜினியின் குறிக்கோள். நதிநீர் இணைப்பை 10 ஆண்டுகளில் சாத்தியப்படுத்தப்படும் என்று கூறினார்.

இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com