தூத்துக்குடி, ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு ரஜினி மனு

தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக விலக்கு கேட்டு அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ரஜினி மனு தாக்கல் செய்துள்ளார்.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on

சென்னை:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் காயமடைந்தோருக்கும் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது போராட்டம் பற்றி கருத்து தெரிவித்த ரஜினி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு சில சமூக விரோதிகளே காரணம். போலீசை மட்டும் குறை கூறுவது தவறு என கூறியிருந்தார்.

இதையடுத்து வருகிற 25-ந் தேதி ரஜினிகாந்த் ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் ரஜினிக்கு சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில் 25-ந்தேதி நேரில் ஆஜராவதில் இருந்து ரஜினி விலக்கு கேட்டுள்ளார். தூத்துக்குடியில் உள்ள அலுவலகத்தில் ஆஜராக விலக்கு கேட்டு அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ரஜினி மனு தாக்கல் செய்துள்ளார்.

ரசிகர்கள் அதிகளவில் கூடினால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே நான் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என அவர், மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கான கேள்விகளை எழுத்து மூலம் தந்தால் அதற்கு பதில் தர தயாராக இருப்பதாகவும் ரஜினி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com