ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் கட்சி பதவி- ரஜினிகாந்த் அதிரடி முடிவு

குடும்ப அரசியலுக்கு இடம் இல்லை எனவும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் கட்சி பதவி வழங்குவது எனவும் ரஜினிகாந்த் முடிவு செய்திருப்பதாக ராஜு மகாலிங்கம் தெரிவித்துள்ளார். #Rajinikanth
ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான்  கட்சி பதவி- ரஜினிகாந்த் அதிரடி முடிவு
Published on

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதையடுத்து, ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. இதற்கான நிர்வாகிகள் மாவட்டம், நகரம், வட்டம் அளவில் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கோவை, புதுச்சேரிக்கு மட்டுமே நிர்வாகிகள் பட்டியல் வெளியாக வேண்டியுள்ளது. என்றாலும் அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்படுவதற்கு முன்பு அனைத்து மாவட்ட முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அகில இந்திய பொறுப்பாளர் சுதாகர், மாநில செயலாளர் ராஜு மகாலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நேர்காணல் நடந்தது. அதன் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும்? தொடங்க இருக்கும் புதிய கட்சியை மக்களிடம் எப்படி கொண்டு சேர்க்க வேணடும்? என்பது பற்றிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, இன்று சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு சுதாகர், ராஜு மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வந்திருந்த முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com