கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு வழங்கினார் ரஜினிகாந்த்

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை வழங்கினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவருக்கு புதிய வீட்டின் சாவியை ரஜினிகாந்த் வழங்கினார்
கஜா புயலால் பாதிக்கப்பட்டவருக்கு புதிய வீட்டின் சாவியை ரஜினிகாந்த் வழங்கினார்
Published on

சென்னை:

கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. சிலரது வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி மற்றும் பொருட்களை வழங்கினர்.

அவ்வகையில், கஜா புயலால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு வீடுகளை கட்டித் தர நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். 

அதன்படி நாகை மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் கடும் பணி நடைபெற்றது. 

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகளை இழந்த 10 பேருக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடுகளை வழங்கினார். பயனாளர்களை இன்று சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு அழைத்து, வீடுகளுக்கான சாவியை ரஜினிகாந்த் வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com