தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் நீடிப்பு -ரஜினி

தமிழகத்தில் சரியான, ஆளுமையான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
Published on

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழகத்தில் சரியான, ஆளுமையான தலைமைக்கு இன்னும் வெற்றிடம் உள்ளதாக கூறினார். 

‘என் மீது குறிப்பிட்ட சிலர் பாஜக சாயம் பூச நினைக்கிறார்கள், இது சகஜம். திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசிய விவகாரத்தை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன. அயோத்தி நில வழக்கில் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அனைவரும் அமைதி காக்கவேண்டும். நான் அரசியல் கட்சி தொடங்கும் வரை திரைப்படங்களில் நடிக்க உள்ளேன்’ என்றார் ரஜினி.

மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து சமீப காலமாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். 

இதற்கு பதிலளித்த ரஜினி, ‘மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்த விவரம் எனக்கு தெரியாது, இதனால் கருத்து சொல்ல விரும்பவில்லை’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com