அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.40 கோடி பதுக்கல் - கே.டி.ராஜேந்திரபாலாஜி

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.40 கோடி பதுக்கி வைத்துள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். #AMMK #KTRajendraBalaji
அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.40 கோடி பதுக்கல் - கே.டி.ராஜேந்திரபாலாஜி
Published on

சாத்தூர்:

சாத்தூரில் அமைச்சர் கே.டி.ராஜேந் திரபாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. கட்சியை கைப்பற்ற நினைக்கிறார். அவர் முதல்- அமைச்சர் பதவி ஆசையில் வெறிபிடித்து அலைகிறார். மக்கள் நீதி மய்யம் கட்சி களத்திலேயே கிடையாது. ஜெயிக்க முடியாத கட்சி என்ன வேண்டுமானாலும் கூறலாம். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று குறிப்பிடலாம். நாங்கள் எப்போதும் எங்களது சாதனையை கூறியே ஓட்டு கேட்போம்.

தி.மு.க. இந்த தேர்தலில் அ.தி.மு.க.விடம் தோற்கும். அ.தி.மு.க. சினம் கொண்ட சிங்கம். தி.மு.க. மதம் கொண்ட யானை. சினம் கொண்ட சிங்கத்திடம் மதம் கொண்ட யானை தோற்று ஓடும்.

கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சரை குறை கூறுகிறார் மு.க.ஸ்டாலின். இப்போது அவரது கட்சியினர் வீட்டில் கட்டுக் கட்டாக பணம் கைப்பற்றப்பட்டபோது ஏன் வாய் திறக்கவில்லை. கொள்ளையடித்த பணம் இருந்தால் வருமான வரித்துறையினர் சோதனை செய்யதான் செய்வார்கள்.

சாத்தூர் அ.ம.மு.க. வேட்பாளர் எதிர்கோட்டை சுப்பிரமணியன் ரூ.40 கோடி பதுக்கி வைத்துள்ளார். அவரது வீட்டிற்கு எப்போது வருமான வரித்துறையினர் சோதனை வரும் என்று தெரியவில்லை.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒரு நகைச்சுவையாளர், நகைச்சுவையாக தான் பேசுவார். அவருக்கெல்லாம் யாரும் ஓட்டுப்போட மாட்டார்கள். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் அவர்களை யாரும் ஏமாற்றி வெற்றி பெற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். #AMMK #KTRajendraBalaji

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com