ராஜபாளையம் அருகே ராஜவர்மன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஊரடங்கால் வறுமையில் தவிக்கும் கார், வேன்,ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவது குறித்து ராஜவர்மன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ராஜவர்மன் எம்.எல்.ஏ.
ராஜவர்மன் எம்.எல்.ஏ.
Published on

ராஜபாளையம்:

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் வேலைக்கு செல்ல முடியாமல் வறுமையில் தவிக்கும் கார், வேன்,ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவது குறித்து அந்தந்த சங்க பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அட்டை மில்முக்கு ரோட்டில் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் தலைமையில் நடைபெற்றது.

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் உள்ள கார் ஸ்டாண்டு ஓட்டுநர்கள். வேன் ஸ்டாண்டு ஓட்டுநர்கள் (சீட்வேன், லோடுவேன்). ஆட்டோ ஸ்டாண்டு ஓட்டுநர்கள்(லோடு ஆட்டோ,பயணிகள் ஆட்டோ) ஆகியோருக்கு ரூபாய் 1500 மதிப்பிலான நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை சொந்த பொறுப்பில் வழங்கப்படும் என்று எம்.எல்.ஏ.ராஜவர்மன் அறிவித்தார்.

கூட்டத்தில் ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாவட்டக்கவுன் சிலருமான சங்கைவேல்முருகன், ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு ஒன்றிய செய லாளர் மயில்சாமி, மாவட்ட இலக்கியஅணி துணைசெயலாளர் கந்தகிருஷ்ணகுமார்,ஒன்றிய கவுன்சிவர்கள் மணி முத்து, ராஜ்குமார், ஒன்றிய பொருளாளர் சுப்பை யாத்துரை, முன்னாள் வைஸ்சேர்மன் குட்டி. இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் முருக பூபதி,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் மாரியப்பன், ஒன்றிய பேரவை செயலாளர் விவேகானந்தன், அவைத் தலைவர் முருகானந்தம்,துணை செயலாளர் பழனி செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com