ராஜஸ்தானில் பனிமூட்டத்தால் வாகனங்கள் மோதல்- 2 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியாகினர்.
பனிமூட்டம்
பனிமூட்டம்
Published on

ஜோத்பூர்:

வடமாநிலங்களில் தற்போது குளிர்காலம் என்பதால் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. காலையில் விடிந்து வெகுநேரமாகியும் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே வாகனங்களை இயக்குகின்றனர். எனினும் ஆங்காங்கே விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் இன்று காலை அடர்ந்த பனிமூட்டத்திற்கு இடையே வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. அப்போது, பார்வை தூரம் மிகவும் குறைந்த நிலையில் 2 பேருந்துகள் மற்றும் ஒரு கார் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. போஜ்கா கிராமத்தின் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com