மாட்டுத்தாவணியில் நிரந்தர சென்ட்ரல் மார்க்கெட் அமைக்க வேண்டும்- ராஜன்செல்லப்பா கோரிக்கை

மாட்டுத்தாவணியில் நிரந்தர சென்ட்ரல் மார்க் கெட் அமைக்க வலியுறுத்தி, சட்டசபையில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.
மாட்டுத்தாவணியில் நிரந்தர சென்ட்ரல் மார்க்கெட் அமைக்க வேண்டும்- ராஜன்செல்லப்பா கோரிக்கை
Published on

மதுரை:

மதுரை வடக்கு சட்ட மன்ற தொகுதி உறுப் பினர் ராஜன் செல்லப்பா சட்டசபையில் பேசியதாவது:-

வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாட்டுத்தாவணியில் தற்காலிக சென்ட்ரல் மார்க்கெட் இயங்கி வருகிறது. நிரந்தர சென்ட்ரல் மார்க்கெட் அமைக்க மாட்டுத்தாவணி பஸ் நிலையம் அருகே உள்ள காலி இடத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் எந்தவித பணிகளும் நடைபெறவில்லை.

எனவே அந்த இடத்தில் நிரந்தர சென்ட்ரல் மார்க்கெட் அமைத்து காய்கறிகளை பதப்படுத்தி வைக்க குளிரூட்டப்பட்ட மையம் அமைக்கப்படுமா? 

இவ்வாறு பேசினார்.

இதற்கு பதில் அளித்த வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, இந்த கோரிக்கை குறித்து விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com