மத்தியபிரதேச தேர்தல்- ராகுல் காந்தி அடுத்த மாதம் அதிரடி பிரசாரம்

மத்திய பிரதேச மாநிலத்தில் ராகுல் காந்தி அடுத்த மாதம் முதல் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறார். இது தொடர்பாக அவர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார். #Congress #RahulGandhi
மத்தியபிரதேச தேர்தல்- ராகுல் காந்தி அடுத்த மாதம் அதிரடி பிரசாரம்
Published on

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிகிறது.

இதனால் இந்த 3 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது.

மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து 15 ஆண்டுகள் ஆகிறது. 2003, 2008, 2013 ஆகிய தேர்தல்களில் அந்த கட்சி பா.ஜனதாவிடம் தோற்றது.

இந்த முறை சிவராஜ்சிங் சவுகானின் பா.ஜனதா ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியான வியூகம் அமைத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் அங்கு நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தார்.

குஜராத், கர்நாடகா சட்டசபை தேர்தல்களில் பின் பற்றியது போல அவர் பிரசாரத்தின் போது கோவில்களுக்கு செல்கிறார். ஓம் சுரேஷ்ரில் உள்ள சிவன் கோவிலில் இருந்து ராகுல் காந்தி தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து அவர் வீதிவீதியாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

மத்திய பிரதேச தேர்தல் பிரசாரம் தொடர்பாக ராகுல் காந்தி டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.

15 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பாக அதிரடியான வியூகம் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பா.ஜனதா அரசுக்கு எதிராக வீசும் அலையை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்பது பற்றி ராகுல் காந்தி அவர்களிடம் விளக்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com