பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பயனடைந்தவர் அமித்ஷா மட்டுமே: ராகுல் காந்தி

பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பலனடைந்தது பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மகனும் தான் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பயனடைந்தவர் அமித்ஷா மட்டுமே: ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி:

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் அமித்பாய் ஷா நடத்தி வரும் நிறுவனங்களின் நிதியாண்டு அறிக்கை மற்றும் ஆண்டறிக்கை விவரங்களை இன்று வெளியிட்டிருந்தார்.

அதில், பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு சொந்தமான டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவே லிமிடெட் நிறுவனம் கடந்த 2013-14-ம் நிதி ஆண்டை காட்டிலும், 2015-16-ம் நிதி ஆண்டில் 80 கோடி அளவுக்கு நிகர லாபம் அடைந்துள்ளது என்பதை வெளியிட்டிருந்தார்.

பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் பெற்றது ரிசர்வ் வங்கியோ அல்லது ஏழை விவசாயிகளோ அல்ல. அது ஷா மற்றும் ஷாவின் மகன், ஜெய் அமித் என பதிவிட்டுள்ளார். மேலும், அந்த நிறுவனம் தொடர்பான வெப்சைட் முகவரிகளை இணைப்பாக பதிவிட்டிருந்தார்.

இதேபோல், காங்கிரஸ் தலைவர் ரஜீவ் கவுடா, சவுரவ் கோகோய், ஷர்மிஸ்தா முகர்ஜி மற்றும் ரந்தீப் சுர்ஜீவாலா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அமித்ஷாவுக்கு நல்ல நாள் வந்துவிட்டது என தங்களது வலைத்தளங்களில் 

பதிவிட்டிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com