நிதி மந்திரி திறமையற்றவர் - ராகுல் காந்தி கடும் தாக்கு

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் திறமையற்றவர் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on

திருவனந்தபுரம்:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில், கேரளாவின் முக்கம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மத்திய நிதி மந்திரிக்கு தெரியாது. அடிப்படையிலேயே அவர் திறமையற்றவர். வெங்காய விலை உயர்வு பற்றி கேட்டால், வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை என்கிறார். ஐக்கிய  முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நாட்டின் நிதி பொறுப்பை திறமைசாலிகள் கையாண்டனர் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com