உ.பி.: கோரக்பூரில் குழந்தைகளை இழந்த பெற்றோரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்

அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை இன்றி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோரை ராகுல் காந்தி இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.
உ.பி.: கோரக்பூரில் குழந்தைகளை இழந்த பெற்றோரை சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில், உரிய சிகிச்சை அளிக்க தவறியதால், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக 71 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இதற்கிடையே, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இன்று கோரக்பூருக்கு வந்தார். கோரக்பூர் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை இன்றி தங்களது குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோரை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களும் வந்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com