

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் நான்குமுறை போட்டியிட்டு வெற்றிபெற்ற ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார்.
இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்த ராகுல் காந்தி பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் முதன்முறையாக இன்று அமேதி தொகுதிக்கு வந்தார்.
அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகள், பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்திவரும் ராகுல் காந்தி பொதுக்கூட்டம் ஒன்றிலும் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.